Posts

Showing posts from March, 2014

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"!!!

ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன்அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது.   தாலுகா அளவில்அவை பிரித்து வழங்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில், ஏப்ரல், 24ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம், புதிய வாக்காளர் சேர்க்காமல், 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 418 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்துக்கும், 5 பேர் வீதம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 2 ஆயிரத்து 90 பேர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விடுப்பில் செல்ல நேரிட்டால், அதை சமாளிக்க கூடுதலாக, 20 சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கம்ப்யூட்டர் மூலம் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்யும் பணி அந்தந்த கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இவர்களுக்கு பணி நியமன ஆணையை தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது.ஒவ்வொரு பணி நியமன ஆணையிலும், ஓட்டுச்சாவடி விவரம், பணியாளரின் முகவரி, ஃபோன் எண்ணுடன் முழுவிவரம் இடம் பெற்று

Departmental exam-SYLLABUS

click here to view....

Departmental exam-papers

click here to view....

வீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்!!(தி இந்து தமிழ் நாளிதழ்)

சொந்த வீடு கனவில் இருக்கும் பலருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தோன்றி 110 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் வீட்டுக் கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளப் போக்கைக் கடைபிடித்து வருகின்றன.  வங்கிக் கடன் திட்டங்கள் பலவற்றில் இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். எவ்வளவு காலம்? சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. சொல்லப்போனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தருகிறார்களே, அது எப்படி? என்று பல வாசகர்கள் கேட்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் வங்கிக்குக் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான செக்யூரிட்டிதான். வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதற்குக் கடன் வாங்கினால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி!!

05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம் 12.04.2014~பள்ளி வேலை நாள் 14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை 17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன் 18.04.2014~புனித வெள்ளி விடுமுறை 19.04.2014~சனி விடுமுறை 21.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு தமிழ் 22.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு ஆங்கிலம் 23.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 24.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 25.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 26.04.2014~பள்ளி வேலை நாள் / மூன்றாம் பருவத் தேர்வு கணிதம் 28.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு அறிவியல 29.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு சமூக அறிவியல் 30.04.2014~பள்ளி இறுதி வேலை நாள் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை (32நாட்கள்)

தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தேர்தல் ஆணையம்

     தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும்.        வாக்குப் பதிவின் போது, 20,000 வாக்குச் சாவடிகளை வெப்-காமிரா மூலமும், 10,000 வாக்குச் சாவடிகளை காமிராக்கள் மூலமும் படம் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.                இதற்காக, 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெப்-காமிரா மூலம் படம் பிடிப்பது, அவற்றை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

தேர்தல் அலுவலர்களுக்கு பணி ஆணை மாதிரி வாக்குசாவடியில் சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலும் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இந்த தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு அலுவலருக்கும் பணி ஆணையில் ஒரு ‘யூனிக்’ எண் வழங்கப்பட்டுள்ளது.இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்து பார்த்தால் சம்பந்தப்பட்ட அலுவலரின் பெயர், பணிபுரியும் இடம், செல்போன் எண், குடும்ப விவரம் உள்ளிட்ட முழு தகவல்களும் தெரியவரும். இந்த தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்னையில் இன்று 16இடங்களில் நடந்தது. அண்ணாநகர் தொகுதிக்கான பயிற்சி முகாம் அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் நடந்தது. இங்கு 1000 அலுவலர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 45 பேர் வீதம் அமர வைக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடர்பாக சி.டி. மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர், கலெக்டர் சுந்தர வள்ளி, அருள்சந்தர் தயாள், இளங்கோவன், ஜெகந்நாதன் உள்பட அதிகாரிகள் பயிற்சி முகாமை பா

ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Image

பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 16ல் பள்ளி திறப்பு!!

Image
wwwசென்னை: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கிய நிலையில், தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு ஜூன் 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது. கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு கடந்த மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வழக்கமாக பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக துவக்க, உயர்நிலை, பிளஸ் 2

தமிழ்நாடு வரலாறு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில், 1:1 என்ற பதவி உயர்வு விகிதச்சாரம் அடிப்படையில் கடைபிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

TNHTA - MADHURAI HIGH COURT - ORDER REG PROMOTION RATIO FOR BT TO PG CLICK HERE...

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை.

மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ,  தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. இது குறித்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்ட அறிவிப்பு:ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு (டங்ய்ள்ண்ர்ய் டஹஹ்ம்ங்ய்ற் ஞழ்க்ங்ழ்-அசல் மற்றும் நகல்), வங்கி கணக்குப் புத்தகம், வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு-நகல்) ஆகியவற்றை ஓய்வூதிய அலுவலகத்துக்கு வரும் போது எடுத்து வர வேண்டும். மேலும், ஓய்வூதியத்தை கூட்டு கணக்கு (ஒர்ண்ய்ற் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) மூலம் பெறுபவர்கள், தங்களது துணையுடன் எடுக்கப்பட்ட பு

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.-

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.-   CLICK HERE-UG ,PG , THEN +2 ELIGIBLE FOR TRS APPOINTMENT-JUDGEMENT COPY

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே புதிய நியமனம் ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது. அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை

Image
மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளார்  என தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு:::

டில்லி: தில்லி  பல்கலைகளின் பொது நுழைவுத்தேர்வை(CUCET - 2014) எழுதுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது மாணவர்களுக்கு கிடைக்கின்றன. அத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 7 மத்தியப் பல்கலைகள் கலந்து கொள்கின்றன. ஜம்மு, தமிழ்நாடு, கேரளா, ஜார்க்கண்ட், ஹரியானா, காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மத்தியப் பல்கலைகள் இதில் பங்கேற்கின்றன. இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவதன் மூலம், மேற்கண்ட பல்கலைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின்போது, மாணவர்கள் அதிகபட்சம் 3 படிப்புகள் வரை தேர்வு செய்யலாம். அதேசமயம், எந்தவொரு படிப்பிற்கும் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி ஏப்ரல் 2.

ரேசன் கடைகளில் முறைகேடா? பறக்கும் படைக்கு "டயல்" பண்ணுங்க

Image
ரேசன் கடைகளில் முறைகேடா? பறக்கும் படைக்கு "டயல்" பண்ணுங்க

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீடியோவை பாருங்க! பயன் உள்ளதாக இருக்கும்!!

CLICK HERE-Presiding Officers Training Video for EVM operations

வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி 3ஆம் தேதி நடக்கிறது...தினகரன் நாளிதழ் 

சென்னை பல்கலை., தொலைதூர கல்வி தேர்வுகள் அறிவிப்பு!!!

சென்னை பல்கலை தொலைதூர கல்வி, இளங்கலை பட்டப்படிப்பு தேர்வுகளுக்கு, ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க  வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை தொலைதூர கல்வி வாயிலாக, இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு, அபராத கட்டணமின்றி அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத்துடன், அடுத்த மாதம் 15க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை, பல்கலையின், www.ideunom.ac.in  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு விண்ணப்பங்கள் தனியாக அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வரும் 31ம் தேதி தேர்தல் பயிற்சி..

"நாமக்கல் மாவட்டத்தில், வரும், 31ம் தேதி, 1,475 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி தலைமையிடத்தில் பயிற்சி நடக்கிறது' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று (29ம் தேதி) துவங்க உள்ள நிலையில், ஏப்ரல், 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்ததுபோல், தேர்தல் பிரிவில் பணியாற்றும் அலுவலர்களும், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,475 ஓட்டுச்சாவடிகளில், 6,34,267 ஆண், 6,47,346 பெண், 44, திருநங்கை, என, 12,81,657 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக, பாதை வசதி, ஜன்னல், மின்வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு போலீஸ் தரப்பில், பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ள அரசு அலுவலர், ஆசிரியர், போலீஸார், மாஜி சீருடை பணியாளர், தேசிய மாணவர் ப

வருமான வரிவிலக்கு சலுகையை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை: வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!

வருமான வரி விலக்கு பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சலுகையை யாரேனும் தவறாகப் பயன்படுத்துவது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக வழக்கறிஞர் எஸ்.சரவணன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். கேரள மாநிலத்தில் செயல்படும் வேத ரக்ஷ்ன சமிதி உள்ளிட்ட சில அமைப்புகள் வருமான வரிச் சட்டத்தின் 80-ஜி பிரிவின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கு விலக்கு பெற்றுள்ளன. ஆனால் அந்த அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடைகள் அறக்கட்டளை பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, மத ரீதியான செயல்பாடுகள் உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்கு செலவிடப்படுகின்றன. ஆகவே, அறக்கட்டளை பயன்பாட்டுக்காக நன்கொடை பணத்தைப் பயன்படுத்தாத அந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள வருமான வரி விலக்கு சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் சரவணன் கோரியிருந்தார். இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “80-ஜி பிரிவின் கீழ் வர

அரசு பணிக்காக 42 ஆண்டுகள் காத்து இருந்த 65 வயது முதியவர் ஓய்வூதியம் வழங்குவது பற்றி பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

தி-இந்து (தமிழ்-நாளிதழ்) வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து  42 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணிக்கு காத்திருந்த  65  வயது முதியவருக்கு மாத ஓய்வூதியம் வழங்குவது குறித்து  4 மாதங்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ,  திருவேற்காட்டை சேர்ந்தவர் ஈ.ராஜேந்திரன் (வயது  65).  இவர் , சென்னை ஐகோர்ட்டில் ,  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- முதியவர் வழக்கு நான்  5- ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 1971- ம் ஆண்டு அக்டோபர்  11- ந் தேதி , திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ,  அரசு பணிக்காக பதிவு செய்துள்ளேன். தற்போது ,  எனக்கு  65  வயது ஆகி விட்டது. கடந்த  42  ஆண்டுகளாக ,  இதுநாள் வரை ஒரு முறைக்கூட எனக்கு வேலை வாய்ப்புக்காக அழைப்பு கடிதம் வரவில்லை. அரசு வேலை வாய்ப்பினை பெறும் வயதை நான் கடந்து விட்டேன். கலெக்டர் அறிக்கை எனவே ,  இத்தனை ஆண்டுகள் எனக்கு அரசு பணி வழங்காததால் ,  ரூ. 5  லட்சம் இழப்பீடும் , மாதம் ரூ. 3  ஆயிரம் ஓய்வூதியமும் எனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில்

துறை தேர்வுகள் கடைசி தேதி 15.04.2014 வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது

2014-ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.  அறிவிக்கை நாள் : 01.03.2014   விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப. தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை. 

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் விவரம்

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள் விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books 2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books) 3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books). 4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books). 5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books). பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books). 2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books). முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for

வாக்கச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

* வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்... * வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல் ரூ 4800. * வாக்குச்சாவடி அலுவலர் 2 & 3- தரஊதியம் ரூ 1800 முதல் 2800 வரை

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நான், ஆங்கில பாடத்தில் பி.ஏ முடித்து விட்டு எம்.ஏ படித்தேன். அதன்பின்பு, பி.எட் முடித்தேன். என்னுடன் ஸ்ரீகாந்த் என்பவர் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பி.ஏ தமிழ் படித்த போது இரு பட்டங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பி.ஏ ஆங்கில பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின்பு, எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு, 3.10.2013 அன்று ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. நியாயமற்றது இந்த பதவி உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்க மா

+2 முடித்த மாணவர்களுக்காக.....கல்வி கண்காட்சி...

Image

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு.

click here fo G.O..

மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் 4 பணி: ஏப்ரல் 1-ல் 2-ம் கட்ட கவுன்சலிங்..

டி. என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) ஆகிய பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து விலகிய மற்றும் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் எழுத்துத் தேர்வு மதிப் பெண், தொழில்நுட்ப கல்வித்தகுதி, காலிப்பணியிடம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு ஏப்ரல் 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்கும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தேர்வர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அழைப்பு அனுப்பப் பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற் று

முக்கியச் செய்தி

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக "மோகன் வர்கீஸ்"நியமனம்...

குழந்தைகள் கற்க ஒரு இணையதளம்

All of the best K-5 online, interactive, educational games and simulations in one place!  Look for NEW activities added for the 2013-2014 school year! *  Math s *  English language Arts *  Science *  Social studies *  Art *  Brainteasers *  Teacher Tools அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு

PERAVAI NEWS:::: Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014 No.1/1/2014-F-II (B) Government of India Ministry of Finance Department of Expenditure North  Block ,  New Delhi Dated: 27th March. 2014 OFFICE MEMORANDUM Subject:  Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014 . The undersigned is directed to refer to this Ministry’s  Office  Memorandum No.I-8/2013-E-II (B) dated 25th September, 2013 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of  90% to 100% with effect from January, 2014. 2. The  provisions  contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No.1(3)/2008-E-11(B) dated 29th August, 2008 shall continue to be applicable while  regulating  Dearness Allow

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 5 நாட்களில் முடிகிறது!!

Image
சென்னை: "தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்" என தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து பாட வாரியாக, ஐந்து ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால், தேர்தலுக்குப் பின், பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி 15 அல்லது 20 நாள் என இழுவையாக நடக்கும். ஆனால் இந்த ஆண்டு விடைத்தாள் த

12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது இனி?

12 ஆம் வகுப்பு பரீட்சை முடிந்துவிட்டது. இனி அடுத்து படிக்கப்போகும் படிப்பைப்பற்றியோ, அல்லது எதிர்காலம் என்ன என்பது பற்றியோ வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும், சந்திக்கும் நபர்களிடமிருந்தும் பலவிதமான ஆலோசனைகள் இலவசமாக கிடைத்தவாறு இருக்கும். நன்கு படித்த மாணவ மாணவிகள் பெரும்பாலும் இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும் என்பதில் ஓரளவு தெளிவான முடிவுகளுடன் இருப்பர். இருந்தாலும் கல்லூரியை தேர்ந்தெடுப்பது குறித்து குழப்பங்கள் இருக்கும். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று சராசரி படிப்புடைய மாணவ மாணவிகள் பலரும் இருப்பார்கள். சூழ்நிலை குறைவான மதிப்பெண்கள் எடுத்த பலரும் பொருளாதார வசதியின் காரணமாக நன்கொடைகளை வழங்கி நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்துவிடுகின்றனர், அதே போன்று நல்ல மதிப்பெண்கள் எடுத்த சிலர், கல்விக்கட்டணங்கள் மற்றும் கல்லூரியின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களால் செலவு செய்ய முடியாது, என்று வேறு படிப்புகளில் படிக்க வைப்பதும், அல்லது வேறு கல்லூரியை தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நல்ல இலட்சியங்களுக்கும், சிறப்பான சாதனைகளுக்கும்  பொருளாதாரம் எப

இத்தனை படிப்புகள் இருக்கா...?: வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் வியப்பு!!!

"இத்தனை படிப்புகள் இருப்பது இதுவரை எங்களுக்கு தெரியாது" என மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் நடக்கும்  தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் கூறியது: ஜே.ஜெப்ரில்லா (மதுரை): நான் உயிரியல் கணிதம் குரூப் படித்த மாணவி. எனது தந்தை வர்த்தகர். பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். வழிகாட்டி நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் நிறைய கல்லூரிகளை பார்த்த பிறகு தான், நாட்டில் இவ்வளவு படிப்புகள் இருப்பதே தெரிகிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி இது. எல்.நிவேதா (மதுரை): பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். எனக்கு "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்" படிக்க ஆசை. எனது தந்தையும் அதைத் தான் எதிர்பார்க்கிறார். இங்கு வந்த பிறகு பல புதிய கல்லூரிகள் பற்றி தெரிந்துகொண்டேன். பயனுள்ள இந்நிகழ்ச்சிக்கு என்னுடன் படித்த மற்ற மாணவிகளையும் கட்டாயம் வரச் சொல்வேன். எஸ்.கிரண்பிரகாஷ் (மதுரை): எனக்கு சிவில் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க ஆசை. வழிகாட்டி நிகழ்ச்சியில் ஸ்டால் வைத்துள்ள கல்லூரிகளை

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு....

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு இங்கே கிளிக் செய்து இயக்குனர் உத்திரவினை பதிவிறக்கம் செய்யலாம் ... அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

ஆசிரியர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் கடும் நடவடிக்கை: பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடும் எச்சரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஓய்வூதிய பலன் கிடைப்பதை தாமதித்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளிகள், சார்நிலை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெறும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எப்.) இறுதி பணம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசு விதிமுறைகளின்படி ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஜி.பி.எப். இறுதி தொகை, ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட விவரங்களை உரிய ஆவணங்களுடன் மாநில கணக்காயருக்கு அனுப்பி ஓய்வுபெறும் நாளுக்கு மறுநாளே ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும்.ஓய்வூதிய பலன்கள்

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

www.allindiateachersperavai.blogspot.com கலவரத்தில் பலியாகும் தேர்தல்அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடுவழங்க தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போதுஎதிர்பாராமல் நிகழும் கலவரங்கள்,வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள்இறக்க நேரிட்டால் அவர்களதுகுடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநிலஅரசுகளை தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. வன்முறை சம்பவங்களால் கை,கால்உள்ளிட்ட உறுப்புகளை இழக்கநேரிட்டாலோ, கண் பார்வைபாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடுவழங்கவும் தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பானஅறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள்,தலைமைச் செயலர்களுக்குஅனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்விதிமுறை அமலில் உள்ள நிலையில்அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலிகாட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாதுஎன்றும் அறிக்கையில்அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுஉள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில்மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன்முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவுபிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டிதேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும்என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகள உங்களுக்காக...

click here for more details....

தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பே ஓட்டு சாவடி சீட்டு: விநியோகிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

'ஓட்டுப் பதிவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாக, வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஓட்டுச் சாவடிச் சீட்டு' வழங்கும் பணி, நிறைவு பெற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் கமிஷன், அனைத்து மாநில, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * வாக்காளர்களுக்கு வழங்கப்படும், ஓட்டுச் சாவடி சீட்டு, தரமான காகிதத்தில், அச்சிடப்பட வேண்டும். வாக்காளரின் புகைப்படம், தெளிவாக இடம் பெற வேண்டும். * சீட்டு, ஒரு, 'செட்' மட்டும் அச்சிடப்பட வேண்டும். * அச்சிடப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய, ஓட்டுச் சாவடி சீட்டு, ஓட்டுச் சாவடி அலுவலர் மூலம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். * அந்தச் சீட்டில், அதை விநியோகம் செய்யும் அலுவலர் கையெழுத்து, இடம் பெற வேண்டும். சாவடி சீட்டை, சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது வீட்டில் உள்ள வயது வந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும். * சாவடி சீட்டு பெறுவோரின் கையெழுத்து அல்லது கைரேகையை, ஓட்டுச் சாவடி அலுவலர், சீட்டு பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, பதிவேடில் பெற வேண்டும். * வாக

ஆசிரியர்களுக்கு தொலைதூரதேர்தல் பணியை தவிர்க்கக் கோரிக்கை

ஆசிரியர்களுக்குத் தொலைதூர தேர்தல் பணி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலருமான பா. ரவி நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்: ஆசிரியர்கள் பணியாற்றும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதிகளில் தேர்தல் பணிவாய்ப்பு வழங்க வேண்டும். மாறாக, தொலைதூரத்தில் தேர்தல் பணி அளிப்பதால், ஆசிரியைகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆசிரியர்களுக்கு எந்த வாக்குச் சாவடி மையத்தில் பணி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை 2 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், தன்னுடைய பணியிடத்துக்குச் செல்வதற்கான முன்கூட்டிய திட்டமிடலை ஆசியர்கள் மேற்கொள்ள முடியும். ஆசிரியர்களுக்கு, அவர்களின் ஊதியவீதத்தின் அடிப்படையில் தேர்ல் பணி வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், பணி நீட்டிப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியைத் தவிர்க்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனு

விடைத்தாள் திருத்தும் பணி சீனியர்களுக்கு கல்தா - தேர்வுத்துறை உத்தரவு.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மதப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மார்ச்21ல் துவங்கியது. மற்ற பாடங்களுக்கு, ஏப்.,3 ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு, விடைத்தாட்களை சரியாக திருத்தாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்கல்வி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளை தடுக்க, விடைத்தாள் திருத்தும் பணியில், சில மாற்றங்களை செய்து, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், விலங்கியல், தாவரவியல் போன்றமுக்கிய பாடங்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, சீனியர் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டாம். ஜுனியர் ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது