Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு தொலைதூரதேர்தல் பணியை தவிர்க்கக் கோரிக்கை

ஆசிரியர்களுக்குத் தொலைதூர தேர்தல் பணி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து நாகை மாவட்ட டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலருமான பா. ரவி நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:

ஆசிரியர்கள் பணியாற்றும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதிகளில் தேர்தல் பணிவாய்ப்பு வழங்க வேண்டும். மாறாக, தொலைதூரத்தில் தேர்தல் பணி அளிப்பதால், ஆசிரியைகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

ஆசிரியர்களுக்கு எந்த வாக்குச் சாவடி மையத்தில் பணி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை 2 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், தன்னுடைய பணியிடத்துக்குச் செல்வதற்கான முன்கூட்டிய திட்டமிடலை ஆசியர்கள் மேற்கொள்ள முடியும்.

ஆசிரியர்களுக்கு, அவர்களின் ஊதியவீதத்தின் அடிப்படையில் தேர்ல் பணி வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், பணி நீட்டிப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியைத் தவிர்க்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement