Ad Code

Responsive Advertisement

அரசு பணிக்காக 42 ஆண்டுகள் காத்து இருந்த 65 வயது முதியவர் ஓய்வூதியம் வழங்குவது பற்றி பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

தி-இந்து (தமிழ்-நாளிதழ்)வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 42ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணிக்கு காத்திருந்த 65 வயது முதியவருக்கு மாத ஓய்வூதியம் வழங்குவது குறித்து 4மாதங்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க
வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம்திருவேற்காட்டை சேர்ந்தவர் ஈ.ராஜேந்திரன் (வயது 65). இவர்,சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முதியவர் வழக்கு
நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த1971-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி,திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்அரசு பணிக்காக பதிவு செய்துள்ளேன்.
தற்போதுஎனக்கு 65 வயது ஆகி விட்டது.
கடந்த 42 ஆண்டுகளாகஇதுநாள் வரை ஒரு முறைக்கூட எனக்கு வேலை வாய்ப்புக்காக அழைப்பு கடிதம் வரவில்லை. அரசு வேலை வாய்ப்பினை பெறும் வயதை நான் கடந்து விட்டேன்.
கலெக்டர் அறிக்கை
எனவேஇத்தனை ஆண்டுகள் எனக்கு அரசு பணி வழங்காததால்ரூ.5 லட்சம் இழப்பீடும்,மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் எனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், 1971-ம் ஆண்டு முதல் இதுவரை திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற விவர அறிக்கையை தாக்கல் செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில்மாவட்ட கலெக்டரும் அறிக்கை தாக்கல் செய்தார்.
காத்திருப்பு
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில்,குறுக்கு வழியில் அரசு வேலை பெற்றவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. மேலும்மனுதாரர் தன் வயதை குறிப்பிடாமலேயேதன்னுடைய பதிவை குறிப்பிட்ட ஆண்டுகளில் புதுப்பித்து உள்ளார் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால்மனுதாரர் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அவர்கிராமபுறத்தை சேர்ந்தவர். ஒவ்வொரு முறையும் தன்னுடைய பதிவை புதுப்பிக்கும்போதுதான் அரசு பணியை பெற தகுதியானவர்தான் என்று நினைத்துஇத்தனை ஆண்டுகள் அவர் காத்திருந்துள்ளார்.
இப்போதுதனக்கு வேலை கிடைக்காது என்று தெரிந்தவுடன்இந்த கோர்ட்டின் உதவியை நாடியுள்ளார்.
சில மாநிலங்களில்இதுபோல் வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்தவர்களுக்குவேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டால்அந்த நபர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
எனவேபிற மாநிலங்களை போல்வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஏழைகளுக்கு உதவும் விதமாக திட்டத்தை உருவாக்கக்கூடிய காலம் தமிழக அரசுக்கு வந்துள்ளது.
மனுதாரர் இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் கேட்டு,தமிழக அரசிடம் மனு கொடுக்க உரிமை உள்ளது. அவ்வாறு மனுதாரர் கொடுக்கும் மனுவைதமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து, 4மாதங்களுக்குள் தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement