Ad Code

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தும் பணி சீனியர்களுக்கு கல்தா - தேர்வுத்துறை உத்தரவு.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக, மாநிலம் முழுவதும் 66 மதப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி மார்ச்21ல் துவங்கியது. மற்ற பாடங்களுக்கு, ஏப்.,3 ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு, விடைத்தாட்களை சரியாக திருத்தாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்கல்வி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளை தடுக்க, விடைத்தாள் திருத்தும் பணியில், சில மாற்றங்களை செய்து, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், விலங்கியல், தாவரவியல் போன்றமுக்கிய பாடங்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு, சீனியர் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டாம். ஜுனியர் ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, உத்தரவிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement