Ad Code

Responsive Advertisement

இத்தனை படிப்புகள் இருக்கா...?: வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் வியப்பு!!!

"இத்தனை படிப்புகள் இருப்பது இதுவரை எங்களுக்கு தெரியாது" என மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் நடக்கும் 
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் ஆச்சரியம் அடைந்தனர்.
அவர்கள் கூறியது:
ஜே.ஜெப்ரில்லா (மதுரை): நான் உயிரியல் கணிதம் குரூப் படித்த மாணவி. எனது தந்தை வர்த்தகர். பிளஸ் 2 தேர்வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எதிர்பார்க்கிறேன். வழிகாட்டி நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் நிறைய கல்லூரிகளை பார்த்த பிறகு தான், நாட்டில் இவ்வளவு படிப்புகள் இருப்பதே தெரிகிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி இது.
எல்.நிவேதா (மதுரை): பிளஸ் 2 தேர்வில் 1000 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். எனக்கு "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்" படிக்க ஆசை. எனது தந்தையும் அதைத் தான் எதிர்பார்க்கிறார். இங்கு வந்த பிறகு பல புதிய கல்லூரிகள் பற்றி தெரிந்துகொண்டேன். பயனுள்ள இந்நிகழ்ச்சிக்கு என்னுடன் படித்த மற்ற மாணவிகளையும் கட்டாயம் வரச் சொல்வேன்.
எஸ்.கிரண்பிரகாஷ் (மதுரை): எனக்கு சிவில் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க ஆசை. வழிகாட்டி நிகழ்ச்சியில் ஸ்டால் வைத்துள்ள கல்லூரிகளை பார்த்த பிறகு, சிவில், சாப்ட்வேர் துறைகளைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். இங்கு நடந்த கருத்தரங்கு பயனுள்ளதாக இருந்தது. அனைத்து ஸ்டால்களையும் பொறுமையாக பார்க்க விரும்புகிறேன்.
எஸ்.ரகுபாலன் (விருதுநகர்): பிளஸ் 2 தேர்வில் 1100 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக எதிர்பார்க்கிறேன். தகவல் தொழில்நுட்ப துறை பற்றி கருத்தரங்கில் கொடுக்கப்பட்ட விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. கருத்தரங்கில் எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கை தருகின்றனர். இதுவே எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் பள்ளியில் இருந்து மட்டும் 30 பேர் வந்துள்ளோம். நாளை(இன்று)யும் நிறைய நண்பர்களை அழைத்து வருவேன்.
டி.கலா (மதுரை): எனது மகளை அழைத்து வந்துள்ளேன். தினமலர் நாளிதழைப் பார்த்து, வழிகாட்டி பற்றி தெரிந்து கொண்டேன். என் மகள் 1,150 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக எடுப்பார் என எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என திட்டமிடுவதற்காகவே இந்நிகழ்ச்சிக்கு வந்தோம். இங்கு நடக்கும் அனைத்து கருத்தரங்குகளிலும் கலந்துகொள்ள எண்ணியுள்ளோம்.
கே.ரேவதி (வில்லாபுரம்): என் மகளை அழைத்து வந்துள்ளேன். வழிகாட்டியில் வைக்கப்பட்டுள்ள &'இஸ்ரோ&' கண்காட்சி, பயனுள்ளதாக இருந்தது. இதை வேறு எங்கும் காண முடியாது. இங்கு பார்த்த பல விஷயங்கள் வியப்பாக இருந்தன. என் மகள் பயோடெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறார். அதற்கு தேவையான தகவல்கள் இங்கு கிடைத்தன. இதற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement