Ad Code

Responsive Advertisement

தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பே ஓட்டு சாவடி சீட்டு: விநியோகிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

'ஓட்டுப் பதிவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாக, வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஓட்டுச் சாவடிச் சீட்டு' வழங்கும் பணி, நிறைவு பெற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, தேர்தல் கமிஷன், அனைத்து மாநில, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

* வாக்காளர்களுக்கு வழங்கப்படும், ஓட்டுச் சாவடி சீட்டு, தரமான காகிதத்தில், அச்சிடப்பட வேண்டும். வாக்காளரின் புகைப்படம், தெளிவாக இடம் பெற வேண்டும்.

* சீட்டு, ஒரு, 'செட்' மட்டும் அச்சிடப்பட வேண்டும்.

* அச்சிடப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய, ஓட்டுச் சாவடி சீட்டு, ஓட்டுச் சாவடி அலுவலர் மூலம், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

* அந்தச் சீட்டில், அதை விநியோகம் செய்யும் அலுவலர் கையெழுத்து, இடம் பெற வேண்டும். சாவடி சீட்டை, சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவரது வீட்டில் உள்ள வயது வந்தோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

* சாவடி சீட்டு பெறுவோரின் கையெழுத்து அல்லது கைரேகையை, ஓட்டுச் சாவடி அலுவலர், சீட்டு பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, பதிவேடில் பெற வேண்டும்.

* வாக்காளர் இல்லாமல் இருந்தால், வீடு மாறியிருந்தால், இறந்திருந்தால், அவரின் சீட்டை தனி நோட்டில் ஒட்டி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாக்காளர்கள், அன்றைய தினம், வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்றால், ஓட்டுச் சாவடி அலுவலர், நோட்டை சரி பார்த்த பின், ஓட்டளிக்க அனுமதிப்பார்.

* சீட்டு வழங்கப்பட்ட விவரம், அரசியல் கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், ஓட்டுச் சாவடி ஏஜன்டுகளுக்கும், வேட்பாளரின் ஏஜன்டுகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத, ஓட்டுச் சாவடி அலுவலர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* இப்பணியை தேர்தல் அலுவலர் கண்காணிக்க வேண்டும்.

* இந்தச் சீட்டுகளை, மொத்தமாக ஒருவரிடம், ஒப்படைத்து விநியோகிக்கக் கூடாது.

* விநியோகிக்கப்படாத சீட்டுகளை, உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுச் சாவடி சீட்டு கிடைக்காதோர், அங்கு வந்து வாங்கிக் கொள்ள, ஏற்பாடு செய்ய வேண்டும்.

* சீட்டு விநியோகம், தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன், முடிக்கப்பட வேண்டும்.

* சீட்டின் பின்புறம், 'ஓட்டுச் சாவடிக்குள், கேமரா, மொபைல் போன், போன்றவற்றை எடுத்து செல்லக் கூடாது' போன்ற விபரங்கள் அச்சிடப்பட வேண்டும்.

* சீட்டை, வேறு யாரும் நகல் எடுத்து விநியோகிக்கக் கூடாது. இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement