Thursday, March 31, 2016
அரசு பள்ளிகளில் "கட்டிடங்களும் கற்பிக்கும் "என்பதின் அடிப்படையில் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், நண்டுப்பள்ளம் ஊ.ஒ.தொ.பள்ளியில், மாணவர்கள் கற்றலில் ஆர்வத்துடன் பங்கேற்க, இரண்டு வகுப்பறைகளிலும் இப்பள்ளியின் தலைமைஆசிரியர் &உதவி ஆசிரியர் அவர்கள் சொந்த செலவில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்களின் புகைப்படங்கள்...
TENTH MATHS SPECIAL SLIP TEST QN PAPERS PART- II
THANKS TO;
G. NAGARAJAN,
AMGHSS,
THIRUKKUVALAI
NAGAPATTINAM DISTRICT.
7598868760.
7598868760.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?
பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.
இரண்டு வாரங்களில்...:
துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு.
அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 எனநீடிப்பு செய்யப்பட்டுள்ளது
மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், 525 தொழில்நுட்ப உதவியாளர்; 50 உதவி வரைவாளர்; 900 கள உதவியாளர் என, 1,475 காலி பணியிடங்களை நிரப்ப, சென்னை,அண்ணா பல்கலை மூலம், ஏப்., 3ல், எழுத்து தேர்வு நடத்த இருந்தது.
Wednesday, March 30, 2016
1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகையில் ஏற்கெனவே வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
* ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.
மே 2ல் பிளஸ் 2 'ரிசல்ட்'?
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பிரிவுக்கு, ஏப்., 1ல் இயற்பியல் தேர்வும்; கணித பதிவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடக்கிறது. அத்துடன், பிளஸ் 2 தேர்வுகள் முடிகின்றன. மற்ற பிரிவு மாணவர்களுக்கு, மார்ச், 28ல் தேர்வுகள் முடிந்து விட்டன.
10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: எழுத்துப் பிழையால் குழம்பிய மாணவர்கள்.
10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 10.72 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
செயல்படாத பி.எப்., கணக்குக்கும் வட்டி
பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பணம் செலுத்தப்படும் பி.எப்., கணக்குகளுக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. செயல்படாத கணக்குகளுக்கும், ஏப்ரல், 1 முதல் வட்டி அளிக்கப்படும். என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை,இனி 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.
இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறைமுடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.தமிழகத்தில், இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, காகித வழி விண்ணப்ப நடைமுறை தான் அமலில் இருந்து வருகிறது.
Tuesday, March 29, 2016
Tamil Nadu Public Service Commission (TNPSC) Online Registration for Departmental Examinations May 2016
Tamil Nadu Public Service Commission (TNPSC)
Online Registration for
Departmental Examinations May 2016
STOPPED TEMPORARILY FOR MAINTENANCE
Service will be resumed at 10 AM on Wednesday, the 30th March 2016.
(Last date for registration is now extended till 11th April 2016)
Online Registration for
Departmental Examinations May 2016
STOPPED TEMPORARILY FOR MAINTENANCE
Service will be resumed at 10 AM on Wednesday, the 30th March 2016.
(Last date for registration is now extended till 11th April 2016)
10th Maths Special Slip Test....
THANKS TO:
MR.G. NAGARAJAN,
B.T. ASSISTANT,
AMGHSS,
THIRUKKUVALAI
7598868760
திருக்குறள் நடனத்தை பாராட்டி உள்ள போளூர் திருக்குறள் மையத்திற்கு நன்றி ...
தி இந்து தமிழ் நாளிதழில் உலகம் முழுவதும் வெளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் திருக்குறள் நடனம் தொடர்பான செய்தியை படித்து விட்டு பாராட்டு கடிதம் மற்றும் புத்தகம் பரிசாக அனுப்பி உள்ள போளூர் திருக்குறள் மையத்திற்கு நன்றிகள் பல.....
CPS கணக்கில் தங்கள் NOMINEE பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்
நண்பர்களே :
இணையதள முகவரிக்கு சென்று தங்கள் cps no மற்றும் date of birth பதிவு செய்து login செய்யவும்.
ஏப்ரல் மாத உத்தேச கால அட்டவணை
APRIL DIARY- Tentative
- 1-fri - April fool day,
- 2- sat-Grievance day,
- 8- fri-Telugu new year holiday,
- 14- thurs- Tamil new year,
- Dr.Ambedkar birthday holiday,
- 19- tue- Mahaaveer Jayanthi - holiday,
- 21- thurs- R.L- Chitra Pournami,
III TERM EXAM TIME TABLE
பள்ளித் தேர்வுகளை இனி பிப்ரவரியிலேயே நடத்தலாமே?
மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தாமதம் !
தேர்தலையொட்டி, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளும் தாமதமாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இம்மாத இறுதியில் வர வேண்டிய சுற்றறிக்கை இதுவரை வராததால் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இன்ஜி., விண்ணப்பம் எப்போது?ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை.
இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.அண்ணா பல்கலை இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு
பிளஸ் 2 தேர்வில் முறைகேடு செய்ததாக, 39 பேர் சிக்கி உள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று தமிழகம் முழுவதும், 39 பேர் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக சிக்கினர். இதில், உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டும், 30 பேர்; வரலாற்றில், ஏழு பேர்; வணிக கணிதம் மற்றும் தாவரவியலில் தலா ஒருவரும் சிக்கினர்.
ஏப். 1ம் தேதி முதல் அமல் 18 சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதம், கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
Monday, March 28, 2016
அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!
Thanks : Mrs.Sumathi,
- ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.
- ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திககொண்டே இருக்கவேண்டும்.
- வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.
- வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.
6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் நிறைவுறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது . இதில் தேர்வுகள் ஏப்ரல் 6ல் துவங்கி 21ல் நிறைவுறுகிறது என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் கவனத்திற்கு : மொபைல் பேட்டரி வெடித்து சிறுவன் பலி.
மத்தியப் பிரேதச மாநிலம், செகோர் மாவட்டத்தில் மொபைல்போன் பேட்டரி வெடித்ததால் பலத்த தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தான். செகோர் மாவட்டம், பட்கோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஃபதேஹ் என்பவரின் மகன் உவேஷ் (10). இச்சிறுவன் நேற்று தனது மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.
அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்
ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:
Sunday, March 27, 2016
Replacement of New Pension Scheme with Old Pension Scheme: Govt. reply in Lok Sabha
There is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme - Govt. replied in Lok Sabha
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA
UNSTARRED QUESTION NO: 1524
ANSWERED ON: 04.03.2016
பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அரட்டை: அரசு பள்ளி ஆசிரியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
BOARD EXAMINATION - DGNM JULY / AUGUST –2016 | செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள் .
ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ளஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப்பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாகசெலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை சென்னையில் செல்லத்தக்கதான வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.
Saturday, March 26, 2016
Model Public Exam for SSLC English II Paper
- Click Here - Model Public Exam for SSLC English II Paper
Thanks To:-
Mr.M.Muthu Prabagaran,
Graduate Teacher, English,
GHSS,
Sivagangai Dist.
English II Paper - Selected Questions Test
Thanks:-
Mr.M.Muthuprabakaran,
Graduate English Teacher,
GHSS,Sivagangai.
10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப். 15ல் துவக்கம்:கருணை மதிப்பெண் எதிர்பார்ப்பு.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 15 முதல்துவங்குகிறது. 'தமிழ் தேர்வில் இடம்பெற்ற குழப்பமான வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களின் தேர்வுகள், ஏப்., 11ல் முடிகின்றன.
7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு.
தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார். சட்டசபைதேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
மதிய உணவு திட்டம் கண்காணிக்க மாவட்டத்தில் இருவர் குழு.
மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாவட்ட அளவில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காணிப்பு பணியில் ஈடுபட, மாவட்டத்தில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் அடங்கிய, இருவர் குழுவை தேர்வு செய்து விபரங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.
செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும்.செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஜூலை-ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Friday, March 25, 2016
01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
1. உங்கள் வேண்டுதல் கடிதம் மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம் (Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம் ஆணை.
HD திரைப்படங்களை WhatsApp மூலம் அனுப்ப புதிய FMWhatsApp!
இனி HD திரைப்படங்களை WhatsApp வழியாகவும் அனுப்ப முடியும். அதற்கான தனிப்பட்ட WhatsAppதான் FMWhatsApp. இதன் புதிய பதிப்பு இந்த வாரத்தில் வெளியீடப்பட்டுள்ளது. இதில் வசதிகள் மிக மிக அதிகம். எண்ணற்ற தீம்ஸ்களும் உள்ளது. இதனை சாதாரண WhatsApp போன்றே இன்ஸ்டால் செய்யலாம். ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp பயன்படுத்த நினைப்பவர்கள் பயன்படுத்தலாம். இப்போது தளத்தில் டவுன்லோட் செய்து HD படங்களை அனுப்பிமகிழுங்கள்.
மாணவர்களின் ஆதார் எண் விவரம்: சேகரித்து தர தலைமை ஆசிரியர்கள் தயக்கம்.
பள்ளி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து தர, பல முறை உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளி தலைமைஆசிரியர்கள் அலட்சியப்போக்குடன் உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை நிர்வாகம், உடனடியாக விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தேர்வு நேரத்தில் ஆர்.எம்.எஸ்.ஏ.,பயிற்சி; ஆசிரியர்கள் புலம்பல்.
தேர்வு நேரத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13வரை நடக்கிறது. ஆறு முதல்9ம் வகுப்பு களுக்கு ஏப்ரலில் தேர்வு துவங்குகிறது. தேர்வு சமயத்தில் சமூக அறிவியல் பட்டதாரிஆசிரியர்களுக்கு அனை வருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் மார்ச்18முதல் ஏப்., 6வரை10நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
Thursday, March 24, 2016
வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ???
வருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா ??? உடனடியாக TDS பைல் செய்ய வேண்டும் !
14/9/14 நாளிட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் வருமான வரி பிடித்தம் தொடர்பாக தமிழக அரசின் அறிவுரை....
ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.
தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்
விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான, இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான, 'ஜாம்' தேர்வை எழுத வேண்டும்.
Wednesday, March 23, 2016
தொடக்கக்கல்வி செயல்முறைகள்- மதிய உணவுத்திட்டம்- அரசு/அரசு உதவி பெறும் /ஊராட்சி ஒன்றிய -தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு,மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது சார்பாக ஒரு தலைமையாசிரியர்(HM) மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்(Nodel Teacher) தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜனவரி 2016 முதல் அமல்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை.
தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.
பிளஸ் 2வில் முப்பருவ முறை:கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், முப்பருவ முறையை கொண்டு வர வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், கல்வியாளர்கள், எஸ்.எஸ்.ராஜகோபாலன் மற்றும் வசந்தி தேவி, பேராசிரியர் சிவக்குமார், ஆசிரியர் மூர்த்தி ஆகியோர், நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில், கல்வி முறையில் பல குழப்பங்கள் உள்ளன.
வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இணையதளத்தில் அறியலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பின் நிலையை www.tn.gov.inemployment என்ற இணையதளத்தில் அறியலாம். அனைவரும் தங்களது படிப்பு குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.
வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை.
+2 வேதியியல் தேர்வுக்கு 'போனஸ்' 6 மதிப்பெண்
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்திற்கு மார்ச், 14ல் தேர்வு நடந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாள் கடினமாக இருந்தது.
தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க ஆசிரியர் சங்கத்தினர் தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வுபணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்கள் பெறப்பட்டு, பிரச்னை கள் தீர்க்கப்படுகின்றன.
சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை
சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை, மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த, க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும்.
Tuesday, March 22, 2016
உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா? எப்படி அறிந்து கொள்வது?
உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.
+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுற்றி வளைத்து கேட்டதாகவும், கடந்த 10 வருடங்களில் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் கூறி மாணவர்கள் ஏராளமானவர்கள் குற்றம் சாட்டியதோடு மிகவும் வருத்ததிற்குள்ளாகினர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை ’நோட்டீஸ்’
பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்,வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சேலம், பனமரத்துப்பட்டி யூனியனில், 50க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.
WhatsApp மெசேஞ்சர் அப்ளிகேசனுக்கு ஒரே பெரிய போட்டியாளர் Telegramதான். இந்த இரண்டு நிறுவனத்துக்கும் மிக பெரிய போட்டி, சற்று தினறிதான் போனது WhatsApp. Telegram 1000 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்ற வசதியை தந்தது. உடனே WhatsApp போட்டியை சமாளிக்க இனி 256 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்றது.
மாணவி கண் பாதித்த விவகாரம்; ஆசிரியர்கள் மீது வழக்கு
குடியாத்தம் அருகே,பள்ளி மாணவியின் கண் பாதிக்கப்பட்ட சம்பவத்தில்,அஜாக்கிரதையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது,போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நத்தத்தைச் சேர்ந்த பாலாஜி மகள் கோட்டீஸ்வரி, 11.இவர்,இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 9ம் தேதி பள்ளியில் செயல் முறை விளக்கம் நடந்தது.
Results of Departmental Examinations - DECEMBER 2015 (Updated on 21 March 2016)
Results of Departmental Examinations - DECEMBER 2015
(Updated on 21 March 2016) |
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்புபிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கியபாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.அதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, தனியார் பள்ளி ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த, தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும், தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம் செய்யப்பட்டது. கடந்தாண்டு காலை 10.15 மணிக்கு தேர்வு துவங்கி, 75 மதிப்பெண்ணிற்கான ஒரு மதிப்பெண் வினா பகுதி காலை 11.30 மணி வரை, தியரி பகுதி 11.30 முதல் 1.15 மணி வரை எழுத அனுமதிக்கப்பட்டது.
மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை.
'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், உதவியாளர் உட்பட, 2,175 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு, விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில், பலரும் விண்ணப்பித்ததால், இணையதளத்தின் வேகம் குறைந்தது.
ஏ.டி.எம்., மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!
ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு வழங்கப்படும்.
மும்மொழி கல்வித் திட்டம் தேவை:தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில், சென்னையில் நடந்தது.இதில், தனியார் பள்ளிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் மற்றும் இரண்டு வகை முக்கிய பாடங்களுக்கு தேர்வுகளும் முடிந்துள்ளன. முதல் கட்ட மாக, 8.5 லட்சம் மாணவர்கள் எழுதிய மொழி பாடங்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி துவங்கி உள்ளது.
Monday, March 21, 2016
கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு பாராளுமன்ற குழு அறிக்கை
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் ஒரு பாராளுமன்ற குழு செயல்பட்டு வருகிறது. பாரதீய ஜனதா எம்.பி., சத்திய நாராயண ஜாத்தியா தலைமையிலான இந்த குழு தனது 274–வது அறிக்கையில், நாட்டின் கல்வித்தரம் குறைந்து போனது குறித்து குறிப்பிட்டுள்ளது. அதில், கல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.
பி.எப்., பணத்தை எடுக்க புதிய நெறிமுறைகள்
பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்க, புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் படி, பணியில் இருந்து விலகியவர்கள் தங்கள் முழுத்தொகையையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை.
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்:மனப்பாடத்தை நம்பிய பள்ளிகள் தவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
பிளஸ் 2 தேர்வில் 'போனஸ்' மதிப்பெண் தேர்வுத்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை.
'பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணிதத் தேர்வுகளில், மதிப்பெண் வழங்குவதில் சலுகை அளிக்க வேண்டும்' என, தேர்வுத் துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாள், மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பிளஸ்- 2 கணினி அறிவியல்: 4 வகை வினாத்தாள் தயார்.
பிளஸ்- 2 கணினி அறிவியல் தேர்வுக்கு நான்கு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை செய்திக்குறிப்பு: பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வு இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதில் 30 பக்கங்களுக்குகோடு இல்லாத விடைத்தாள் வழங்கப்படும். மேலும் 75 ஒரு மார்க் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
Sunday, March 20, 2016
பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?
பிளஸ் 2 தேர்வுகள் கடினமாக உள்ளதால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும். அதனால், திறமையான மாணவர்களுக்கே, பி.இ., - பி.டெக்., படிப்பில், விரும்பிய பாடம் மற்றும் கல்லுாரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் முடிந்து, உயர் கல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாட தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களின் மதிப்பெண் தான், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற உயர் கல்விக்கான வாய்ப்பை முடிவு செய்யும்.
பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்
பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Subscribe to:
Posts
(
Atom
)