Ad Code

Responsive Advertisement

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

Thanks : Mrs.Sumathi,
  • ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.
  • ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திககொண்டே இருக்கவேண்டும்.

  • வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.
  • வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.
  • மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல், கலை, இலக்கிய ,சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.
  • மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு என்பது வகுப்பறையைத் தாண்டி நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.
  • ஓவியம்,கலை,பேச்சு,பாட்டு ,நடனம்,பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.
  • தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள், அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும்.(கட்டாயம் இல்லை)

  • எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ! அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.
  • எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும், ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது
  • கணிணி, குறுந்தகடு(CD), அடர்தகடு(DVD), வலைத்தளம், கட்செவி, சுட்டுரை, மின்னஞ்சல், செய்தித்தாள்கள் ,காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
  • நாம் பணியாற்றும் பள்ளியும், நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.
  • நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப் படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??
  • விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர் களாகவே இருப்போம்....

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement