Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் ஆதார் எண் விவரம்: சேகரித்து தர தலைமை ஆசிரியர்கள் தயக்கம்.

பள்ளி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து தர, பல முறை உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளி தலைமைஆசிரியர்கள் அலட்சியப்போக்குடன் உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை நிர்வாகம், உடனடியாக விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைசேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் எடுக்கப்படாத மாணவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. முகாம்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண் அடங்கிய விவரங்களை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கை விபரம் உள்ளிட்டவைகளை சரிபார்க்க, இவை ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட உள்ளன.



ஆனால், இவற்றை முழுமையாக கொடுக்கும் பட்சத்தில், பள்ளிகளில் உள்ள போலி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால், பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பல முறை வலியுறுத்தியும், ஆதார் எண் விவரங்களை சேகரித்து வழங்குவதில் தாமதம் செய்து வருகின்றனர். உடனடியாக இந்த விவரங்களை வழங்காவிடில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement