Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்

பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாம்பழப்பட்டு தேர்வு மையத்துக்குச் சென்று விசாரித்தார். தேர்வு மைய கண்காணிப்பாளரான திருநாவலூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ் தேர்வு குறித்து, கண்காணிப்பாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து தேர்வுப் பணியை மேற்கொண்டனர். இதனால் தேர்வு அரை மணிநேரம் தாமதமாக தொடங்கப்பட்டதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட முதன்மை கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியர் தங்கராஜை பொதுத் தேர்வுப் பணியிலிருந்து நீக்கி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement