Monday, August 31, 2015
பிஎப் கணக்கில் இருப்புத் தொகையை இனி செல்போனிலேயே அறியலாம்
பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண் வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.
CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பலனளிக்காத கம்ப்யூட்டர் வசதிகள்:தனியார் இன்டர்நெட் மையங்களில் ஆசிரியர்கள் தவம்
அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.
கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்
இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.
மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
'டிப்ளமோ நர்சிங்' இன்று கலந்தாய்வு
இரண்டு ஆண்டு, 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.
உயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை பேர்?
உயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.
Sunday, August 30, 2015
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் முதல்-அமைச்சர் அறிவிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை யில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.
176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. மாநிலம் முழுவதும், பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்த விருப்ப பட்டியல் படிவங்கள் பெறும் முகாம் நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், ராஜவீதி அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடந்தது.
உண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம்.
உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.
மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியமனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்குஇலவச அறிவியல் சுற்றுலா
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 பேர் தகுதி
தமிழக அரசின், 'புத்தாக்க அறிவியல் விருது' இறுதிப் போட்டிக்கு, 460 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர்' என்ற புத்தாக்க அறிவியல் விருது வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்
பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில் கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
செப்., 5 ல் கலாம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துங்கள்: மாணவர்களுக்கு பொன்ராஜ் வேண்டுகோள்
'ஆசிரியர் தினமான, செப்., 5ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் லட்சிய உறுதியேற்பு நிகழ்ச்சியை, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்த வேண்டும்' என, கலாம் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
'கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்!' - பெற்றோர் தரப்பில் கோரிக்கை
'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதித்துள்ள, கல்வி கடன் வட்டி தள்ளுபடியை அளிக்க, வங்கிகள் விரைந்து செயல்பட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.
அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!
தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை
'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த, பேராசிரியர் யஷ்பால் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
Saturday, August 29, 2015
இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!
நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக மாநிலங்களுக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்
அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகபட்சம் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.
பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு
பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது.
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.
பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்
இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.
பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?
பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி
பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு
தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது;
சுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:
மாணவியருக்கு புது 'நாப்கின்'
பள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
பள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை
பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
Friday, August 28, 2015
ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.
மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன.
இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி
'பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.
பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளியில் தற்போது 16 மாணவர்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினர் முயற்சியால் தற்போது 3 ஆசிரியர்கள், 16 மாணவர்களுடன் செயல்படும் இந்த பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு
அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.
பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.
வருமான வரி கணக்கு சமர்ப்பிக்கசனி, ஞாயிறுகளிலும் கவுன்டர் திறப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்பு கவுன்டர்கள் திறந்திருக்கும்' என, வருமானவரி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.
செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு
நிகழ் கல்வியாண்டு செவிலியர் பட்டயப் படிப்பில் 2000 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
Thursday, August 27, 2015
அன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!
"பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு
ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.
நீங்களும் கல்விக் கடன் பெறலாம் !
உயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.
உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர் கல்வியை பயிலவும் கல்விக் கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்விக் கடன் வழங்கப்படும்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபையில் அறிவித்தார் ஜெயலலிதா
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1101 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!
பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார் எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்! : நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை - வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்
தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.
போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்!
'பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு குறித்து, சிறந்த ஓவியம் வரையும் மற்றும் கட்டுரை எழுதும் மாணவர், ஜப்பான் நாட்டில் மேற்படிப்பு படிக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, பெட்ரோலியத்துறை அறிவித்துள்ளது.
ஒரே இடத்துக்கு 2 ஆசிரியர்கள் நியமனம்
நீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
மழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 3ம் கடைசி தேதி அறிவிப்பு
கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய கலை போட்டிகள்
பாரம்பரிய கலைகளை அறியும் வகையில், பள்ளி மாணவர்கள் இடையே, 'கலை போட்டிகள்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடையாளமாக, பாரம்பரிய கலைகள் உண்டு.
புத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்
மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது.
உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்
'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலை அறிவித்துள்ளது.
Wednesday, August 26, 2015
7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.
SEPTEMBER DIARY...
September Diary :
9- Grievance day
15-Sama ubakarma (RL)
17-Vinayagar sathurthi (RL)
19 to 25 -First term exam
23-Arabath (RL)
24-Pakrith (GH)
26 to Oct 4-
I st Term Holidays
9- Grievance day
15-Sama ubakarma (RL)
17-Vinayagar sathurthi (RL)
19 to 25 -First term exam
23-Arabath (RL)
24-Pakrith (GH)
26 to Oct 4-
I st Term Holidays
வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது - அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26
தொண்டின் மறு உருவம் அன்னை தெரசா
ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.
வருமான வரிக் கணக்கு தாக்கல்: நாளை முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிதியாண்டு 2014-15-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய, வரும் 31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.
தமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் 'பனிஷ்மென்ட் ஏரியா' என்ற மனநிலை அரசு ஊழியர்களை விட்டு அகலவில்லை!
தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை. ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது.
Tuesday, August 25, 2015
Subscribe to:
Posts
(
Atom
)