பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண் வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
யுஏஎண் என்ற எண்ணை செயலாக்கம் செய்ய அனைத்து நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக தாம்பரம் பிஎப் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2226 2251 என்ற தொலைபேசி வாயிலாகவும், ro.tambaram@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு தீர்வுகாணலாம்.வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு யுஏ எண் வழங்குதல் மற்றும் செயலாக்குதல் 22.06.2015 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பிஎப் பணம் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் படிவங்களில் இனி ஒரு ரூபாய் மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம். இம்முறையானது மின்னணுபணபரிவர்த்தனை மூலம் செட்டில் செய்யப்படும் படிவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அனைத்து தொழிற்சாலை, நிறுவனங்கள் தங்களது இபிஎப் சந்தாக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாதம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக சந்தா தொகை செலுத்தும் தொழிலதிபர்கள் வரும் டிசம்பர் 2015 வரை உள்ளூர் காசோலை, வரையோலை மூலமாக தொகையைச் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை