Ad Code

Responsive Advertisement

பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!

பெற்றோர் ஆதார் அட்டை நகல் மூலம், மாணவர்களுக்கு, ஆதார் அட்டை முகாம் நடத்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளி கல்வித்துறை யில், 14க்கும் மேற்பட்ட இலவசத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் மோசடி நடக்காமல் தடுக்க, மாணவ, மாணவியரின் ஆதார் எண்களைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரித்ததில், 70 லட்சம் பேருக்கு ஆதார் எண் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் அட்டைக்கான பதிவு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, ஆதார் எண் இல்லாத மாணவர்களிடம், தாய் அல்லது தந்தையின் ஆதார் எண் மூலம், தகவல்களை பெற்று மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களிடம் பெற்றோரின் ஆதார் எண் வாங்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement