அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி மருந்தகங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். 

இதில் குழந்தைக்கான உடை, படுக்கை, எண்ணெய், ஷாம்பு, சோப்பு, நாப்கின், பவுடர், பொம்மை,நகவெட்டி, துண்டு உட்பட 16 பொருட்கள் இருக்கும். இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.