Ad Code

Responsive Advertisement

8,760 கிராம நிர்வாக அலுவலர்கள் 4 ஆண்டுகளில் நியமனம்: அமைச்சர் உதயகுமார்

அதிமுக அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் 8,760 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முப்பது சதவீத பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு, மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ச.சேகரன் தலைமை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாட்டுப் பேருரையாற்றி பேசியதாவது: 

ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். கடந்த 4 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி., கருணை அடிப்படையில் 8,760 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் யாரும் குற்றம்சாட்ட முடியாத வகையில் நேர்மையான முறையில் பணி நியமனம் நடைபெற்றுள்ளது என்றார்.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement