அகில இந்திய ஒதுக்கீடு போக, காலியிடங்கள் நிலவரம் தெரிய வேண்டியுள்ளதால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இறுதி கட்ட கலந்தாய்வு, வரும், 20ம் தேதிக்கு பிறகே நடக்க உள்ளது. தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு, பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,655 இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்றன. மீத இடங்களுக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்தது.
இந்த இடங்கள் குறித்த விவரங்கள் கிடைத்து, இம்மாதம், 20ம் தேதிக்கு பிறகே, இறுதி கட்ட கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது என, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் இடம்: 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், இடம் கிடைக்காத பொதுப்பிரிவு மாணவர்கள் எட்டு பேர், சுப்ரீம் கோர்ட் வரை சென்று, அரசு கல்லுாரிகளில் கூடுதலாக உருவாக்கப்படும் இடங்களில், சேரும் உத்தரவை பெற்றுள்ளனர். அதனால், பொதுப்பிரிவில், 27 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை