Ad Code

Responsive Advertisement

அம்மா மருந்தகத்தில் மருந்து விலை 25 சதவீத தள்ளுபடிக்கு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகங்களில் அதிகபட்ச சில்லரை விலையில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களில் தற்போது வெளிமார்க்கெட் விலையில் இருந்து 15 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. 

தற்போது அம்மா மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் வாங்கி விற்பனை செய்யப்படுகின்றன. விரைவில் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் இந்த நடைமுறை மாற்றப்படஉள்ளது.தமிழ்நாடு கூட்டுறவு நுகர்பொருள் இணையம் மூலம் ஒருங்கிணைப்பு கொள்முதல் முறையில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்த முறையில் மருந்துகளை வினியோகம் செய்ய 2000 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கேட்டுள்ளன.இவ்வாறு மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் போது, மேலும் குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்ய முடியும். எனவே தற்போதைய விலையில் இருந்து கூடுதலாக 10 சதவீதம் விலை குறைத்து மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. 

ஒருங்கிணைப்பு கொள்முதல் முறையில் கொள்முதல் செய்யப்படும் மருந்துகளை சேமிக்க ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கூட்டுறவு மருந்து குளிரூட்டும் மையங்கள் கட்டப்பட்டு தயாராக உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement