Ad Code

Responsive Advertisement

அரசு மருத்துவ கல்லூரியில் 'சீட்' கூலி தொழிலாளி மகள் தவிப்பு

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, சென்னகிரியைச் சேர்ந்தவர் சித்தன், 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 42. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனை, எம்.பில்., வரை படிக்க வைத்த சித்தன், மகள் யசோதாவையும், அதேபோல் படிக்க வைக்க விரும்பினார். யசோதா, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,093 மதிப்பெண் பெற்றார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியாலஜி படிக்க விண்ணப்பித்தார்; அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது.

கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என்பதால், கூலி வேலை செய்யும் சித்தன் திணறி வருகிறார்.

மாணவி யசோதா கூறியதாவது:அரசு மருத்துவக் கல்லுாரியில், 'சீட்' கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், முதல்கட்டமாக, விடுதி கட்டணம், சேர்க்கை கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.இன்று, சேர்க்கைக்கு செல்ல வேண்டும். அப்போது தான், என்னுடைய கல்வியை தொடர முடியும். பணம் இல்லாததால், என்ன செய்வது என தெரியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.உதவும் உள்ளம் கொண்டவர்கள், மாணவியின் தந்தை சித்தனை, 91500 56302 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 'தமிழக முதல்வர் தாராள உள்ளம் கொண்டவர்; அவர், இந்த மாணவிக்கு உதவ வேண்டும்' என, அந்த ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement