Ad Code

Responsive Advertisement

'நீட்' தேர்வு எழுத புதிய சலுகை...

மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், மூன்று வருட நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து, மூன்று வருடம் எழுதினாலும், இந்த முறை தேர்வு எழுதுவோருக்கு, இது முதல் தேர்வாகவே கணக்கில் கொள்ளப்படும் என, மத்திய சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.

ஆனால், சி.பி.எஸ்.இ., - நீட் இணையதளத்தில், இந்த விதிகளுக்கு ஏற்ப, 'கோடிங்' மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், மூன்று வருடம் தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement