Ad Code

Responsive Advertisement

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்குவிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவ.,8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் இரண்டு இடங்களிலுள்ள எண்கள் வரிசையில் ‛ஆர்' என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும். இப்புதிய நோட்டில் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெறும். பின்பகுதியில் 2017ம் ஆண்டு அச்சடிக்கப்படும். புதியதாக விடப்படும் 100 ரூபாய் நோட்டுகளும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement