Ad Code

Responsive Advertisement

தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு.

தமிழ் தெரியாத ஆசிரியர்களுக்கு, விதிகளை மீறி, கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது' என, ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், தமிழில் தேர்ச்சி பெறாத, தமிழ் தெரியாத ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், தமிழ் தேர்ச்சிதேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக சேரும், பிறமொழி ஆசிரியர்கள், தமிழில் தேர்ச்சிபெறுவது கட்டாயம்.ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற, விதிகள் உள்ளன.


இந்நிலையில், பல ஆண்டுகளாக தமிழில் தேர்ச்சி பெறாத, பிறமொழி ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடக்க கல்வி துறையில், தமிழ் தெரியாதோருக்கு, பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களில், 250 ஆசிரியர்கள் தமிழ் தேர்ச்சி பெறாமல், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கூறுகையில், 'விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். தமிழில் தேர்ச்சிபெறாதோருக்கு, உடந்தையாக செயல்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Post a Comment

1 Comments

  1. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட பிற மொழி ஆசிரியர்களுக்கு அரசாணைகளை மீறி ஊதிய உயர்வு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement