அரசுப் பள்ளிகளில் நவீன கழிப் பறைகள் கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அமைச்சர்கள் செங் கோட்டையன், சம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் முயற் சியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட் டுள்ளது. பாடத் திட்டத்தை தேசிய தரத்துக்கு உயர்த்தும் வகையில் அதற்காக குழு அமைத்து நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களும் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், கழிப்பறை வசதிகளைசெய்து தருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 10ஆயிரம் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, நவீன கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ரெனால்ட் நிசான், சாம்சங், ஹூண்டாய், செயின்கோபைன், டெய்ம்லர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை