* தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன.
* இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிக்க 1 லட்சத்து 48 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்தனர். அதில்1.41 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
* கடைசியாக 2012-13ல் பொறியியல் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னை,: “இந்தாண்டுக்கான பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ.10,000 உயருகிறது” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி முடிவடைந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 3ம்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. 1 லட்சத்து 48 ஆயிரத்து 414 விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பித்தனர். அதில், தகுதி வாய்ந்த 1 லட்சத்து 41 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிற காரணத்தால் வழக்கமாக ஜூன் 20ம்தேதி தொடங்கும் இன்ஜினியரிங் கவுன்சலிங் இந்தாண்டு தள்ளிப் போகிறது. இந்நிலையில், ஜூலை 23ம் தேதிக்கு பிறகு கவுன்சலிங் நடத்த திட்டமிட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்வி கட்டணத்தை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், கடந்த 2012-13ம் ஆண்டு பொறியியல் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
இதுதொடர்பாக, பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம், கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதையேற்று இந்தாண்டு 2017-18ம் கல்வியாண்டிற்கான கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று சட்டப்ேபரவையில் கேள்வி நேரத்தின் போது வில்லிவாக்கம் ரங்கநாதன் (திமுக) கேள்வி எழுப்பினார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்: கடந்த 2016-17ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 599. ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 61. தரம் உள்ள கல்லூரி, தரம் இல்லாத கல்லூரி என்று அரசு என்றைக்குமே எந்த கல்லூரியையும் நிர்ணயிப்பது இல்லை. மாணவர்களே தர வரிசை பட்டியலில் உள்ள கல்லூரியை பற்றி கவுன்சலிங் நடக்கின்ற போது அவர்களாகவே தேர்வு செய்து கொள்கிறார்கள்.
தரமில்லாத கல்லூரி என்று சொல்வது, அங்கே அடிப்படை வசதிகள் எது குறைவாக இருக்கிறதோ, அங்கே தகுதியான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரியை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த கல்லூரியிலே அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கிறது.
ஆசிரியர்கள் இல்லை என்பதைத் தான் அரசு சுட்டிக் காட்டுகிறது.கல்வி கட்டணத்தை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, கடந்த 2012-13ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கடுத்து கடந்த 5 ஆண்டு காலமாக அரசு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை.
இதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி சங்கங்கள் கடந்த 5 ஆண்டு காலமாக அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கிருஷ்ணா கமிட்டி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, இந்த தொகைக்கு மிகைப்படாமல் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகளை “எக்ஸ்”, “ஒய்”, “இசட்” என்று 3 பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். “எக்ஸ்” பிரிவில் இருக்கக்கூடிய கல்லூரிகளுக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 300 கல்வி கட்டணம் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். “ஒய்” பிரிவில் இருக்கக்கூடிய கல்லூரிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 500 என்றும், “இசட்” பிரிவில் இருக்கக்கூடிய கல்லூரிகளுக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் 900 என்றும் கல்வி கட்டணத்தை பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை கிருஷ்ணா கமிட்டியானது ரூ.10,000 கூடுதலாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கவுன்சலிங்கில் சேருகின்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ரூ.40,000 லிருந்து ரூ.50,000, கவுன்சலிங் இல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு கோட்டாவில் சேருகிற மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் என்று அரசுக்கு அந்த கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறார்கள். அந்த கமிட்டியின் பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை