பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதி. இந்த பள்ளியின் கணினி பயிற்றுனராக மணிசேகரன் (45) உள்ளார்.
இவர் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்று பிளஸ் 2 மாணவர்களுக்கு மணிசேகரன் கணினி பாடம் எடுக்கச் சென்றார். அப்போது பேசிக் கொண்டிருந்ததாக கூறி மாணவ, மாணவியரை மூங்கில் குச்சியால் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இவர்களில் கிருஷ்ணவேணி என்ற மாணவிக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்று கட்டுப்போட்டு வந்தார்.
மதியம் உணவுக்கு சென்ற மாணவர்கள் புகாரின்படி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் வந்து விசாரித்தனர். ஆசிரியர் மணிசேகரன் கூறும்போது, மாணவர்களை தேர்வு எழுதுமாறு கூறியதாகவும், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் அடித்ததாகவும் கூறினார். அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விசாரணை நடத்தி ஆசிரியர் மணிசேகரனை சஸ்பெண்ட் செய்தார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை