Ad Code

Responsive Advertisement

பள்ளிகள் திறப்பில் திருவண்ணாமலை கலெக்டர் குழப்பமான அறிவிப்பு!


முதலில் பள்ளிகள் வரும் 15ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், சில மணி நேரத்தில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனால் பெற்றோர்கள் கடும் குழப்பமடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும், மாணவ மாணவிகளுக்கு நாளை (7-6-2017) பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயில் காரணமாக பள்ளிகள் வரும் 15-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று காலை அறிவித்தார். இதனிடையே, பள்ளிகள் நாளை வழக்கம்போல் திறக்கப்படும் என்று கலெக்டர் திடீரென தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாள்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், மூன்று நாளில் தென்மேற்கு பருவமழை தொடரும் என்று அறிவித்துள்ளது.

சென்னையில் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement