Ad Code

Responsive Advertisement

நாளை அனைத்து பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை முடிந்து நாளை  அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.  

மார்ச் மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தன. அதைத் தொட ர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரலில் நடந்தது. கல்வியாண்டு வேலை நாட்களின்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வெயில் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் கோடை வெயில் வாட்டி வதைத்து  வந்ததால், பள்ளிகள் திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மேலும் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.அந்தந்த மாவட்ட ஆட்சியர் அதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

ஆனால், 7ம் தேதியே பள்ளிகளை திறக்க வேண்டும். காலம் நீட்டித்து பள்ளிகள் திறந்தால் கல்வி பாதிக்கப்படும் என்று அனைத்து ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து அரசு அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement