Ad Code

Responsive Advertisement

RTE சேர்க்கை கூடுதல் அவகாசம் தர அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணம், நன்கொடை இன்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, எந்த வித கட்டணமும் இன்றி, பாடங்கள் நடத்தப்படும். 

பொருளாதாரத்தில் நலிந்த, அனைத்து குடும்பத்தினரும், குழந்தைகளை சேர்க்கலாம்.தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப் பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர்; நாளை விண்ணப்ப பதிவு முடிகிறது. இன்னும், ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் அளிக்கலாம். 

இது குறித்து, பெற்றோர், மாணவர்கள் மேம்பாட்டு நலச் சங்க பொதுச்செயலர், வி.பி.வில்லியம்ஸ் கூறுகையில், ''பெரும்பாலான மாணவர்களுக்கு, எப்படி விண்ணப்பிப்பது என, தெரியவில்லை. தனியார் பள்ளிகள் இதற்கு வழிகாட்ட வேண்டும். விண்ணப்பிக்கும் அவகாசத்தை, இந்த மாத இறுதி வரை, தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.

யாருக்கு தகுதி? : இலவச கல்வி திட்டத்தில், ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான அனைவரும் விண்ணப்பிக்கலாம். அரசு வருவாய் துறை வழங்கும், வருமானச் சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்கள், அரசு அதிகாரிகள் முன் பரிசீலிக்கப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றும் அவசியம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement