Ad Code

Responsive Advertisement

RTE : ஒரு நாளில் முடிகிறது பதிவு

எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிக் பள்ளிகளில், அரசின் செலவில் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, ஒரு நாளில் முடிகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுவர். 

எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை, கட்டணம் இன்றி படிக்கலாம்.பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற நுழைவு வகுப்பில், 10 ஆயிரம் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டு ள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in
என்ற இணையதளமுகவரியில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.இதுவரை, 30 ஆயிரத்துக்கும் குறைவானோரே, பதிவு செய்துள்ளனர். வரும், 18ம் தேதியுடன், இரண்டு நாட்களில், விண்ணப்ப பதிவு முடிகிறது.இன்னும், ஒரு லட்சம் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த வாய்ப்பை, பெற்றோர் பயன்படுத்தி கொள்ள, கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement