மதுரையில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ.,) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவிற்காக வெளி நபர்களிடம் பெற்றோர் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்,' என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்டத்தில் 154 தனியார் பள்ளிகளில் 9270 மாணவர் சேர்க்கையில் ஆர்.டி.இ.,யின் 25 சதவீதம் அடிப்படையில், 2368 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 18 வரை நடக்கிறது. சி.இ.ஓ., மெட்ரிக் ஆய்வாளர், டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., அனைத்து ஏ.இ.ஓ.,க்கள், அனைத்து வட்டார வளமை அலுவலகங்கள் என மொத்தம் 36 மையங்களில் இலவச ஆன்லைன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுதவிர அரசு இ- சேவை மையங்களிலும் பதியலாம். பதிவேற்றம் செய்யும் இந்த அலுவலகங்களுக்கு வெளியே வெளி நபர்கள் சிலர், 'பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சீட் பெற்று தருவதாக,' பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "ஆன்லைன் பதிவேற்றத்திற்கு கட்டணம் இல்லை. தனி நபரிடம் பணம் கொடுத்து பெற்றோர் ஏமாற வேண்டாம். மாணவரின் போட்டோ, ஜாதி, வருவாய், இருப்பிட சான்று மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவேற்றம் செய்யலாம். வெளிநபர்களை நம்ப வேண்டாம். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வசூல் குறித்து கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்," என்றார்

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை