Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்கள் போராட்டம் : கோடை பயிற்சி ரத்து.

பயிற்சிக்கு வர மறுத்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அவர்களுக்கான கோடை பயிற்சியை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்கள் மூலம், கற்பித்தலின் புதிய முறைகள் குறித்து, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி தரப்படுகிறது. இதன்படி, கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு, இலவச உணவு, இருப்பிடத்துடன், குறிப்பிட்ட மாவட்டங்களில், நேற்று முதல், ஐந்து நாட்கள் கோடை கால பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி, 'பயிற்சிக்கு வர மாட்டோம்' என, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். பயிற்சியை கைவிட, ஆசிரியர் சங்கங்களின் மூலம், பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இருப்பினும், திட்டமிட்டபடி நேற்று பயிற்சி வகுப்புகள் துவங்கின. பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களும், அவர்களுடன் வந்த சங்க நிர்வாகிகளும், பயிற்சி அறைக்குள் செல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். 'போராட்டத்தால், அரசியல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது' என, அமைச்சர் தரப்பில், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆசிரியர்களுக்கான கோடை பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''ஆசிரியர்களின் உணர்வுகளை புரிந்து, பயிற்சியை ரத்து செய்துள்ள, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement