Ad Code

Responsive Advertisement

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பதிவு: புதிய கட்டணம் நிர்ணயம்- உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல்


  • அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு புதிய கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.


 விளைநிலங்களை வீட்டுமனைகள் ஆக்குவதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதிய வரைவு விதிகளுடன் கூடிய அரசாணைகளை தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வீட்டு மனைகளாக்க அனுமதி இல்லாத நிலங்கள்

விவசாய நிலங்கள், ஆறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள், அரசு நிலம், கோயில் இடம், வக்பு வாரிய நிலம், உரிமம் இல்லாத காலி நிலம் ஆகியவற்றை வீட்டு மனைகளாகப் பதிவு செய்ய அனுமதி இல்லை.தொடர்ந்து வேளாண்மை செய்யத் தகுதியான நிலத்தை, வீட்டு மனைகளாக மாற்றக் கூடாது.வீட்டு மனையாக்க விண்ணப்பிக்கப்படும் இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லை என்பதற்கு வேளாண்துறை இணை இயக்குநரிடம் அறிக்கை பெற வேண்டும்.

புதிய கட்டணம்

மாநகராட்சிகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ள ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100 கட்டணம். நகராட்சிகளுக்கு ரூ.60-ம்,பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement