Ad Code

Responsive Advertisement

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வு காணவும், குழந்தை உரிமை மீறல் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளை களைந்திடவும் தமிழ்நாட்டில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத் தலைவரின் பதவிக்காலம் கடந்த 2016 ஜனவரி 17-ம் தேதி முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், அணையத் தலைவர், ஆணைய உறுப்பினர்கள் நியமனம் குறித்த விண்ணப்பங்கள் அரசால் கோரப்பட்டது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக ஷீலா ஜெயந்தி (சென்னை), சி.திலகவதி (தஞ்சாவூர்), மீரா ஷங்கர் (தூத்துக்குடி), ஏ.ராமநாதன் (சிவகங்கை), இ.ராமலிங்கம் (சென்னை), பி.மோகன் (திருச்சி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement