Ad Code

Responsive Advertisement

100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.


அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை, பள்ளி துப்புரவு மற்றும் பராமரிப்பு பணியில்ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பறைக்கு இருவர் வீதம், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் அனுப்பப்பட உள்ளனர். இவர்கள், தினமும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்து வைப்பது, புதர் மண்டிய வளாகங்களை சீர்படுத்துவது போன்ற பணிகளை செய்வர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement