Ad Code

Responsive Advertisement

மாற்று திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், மாற்று திறனாளி ஆசிரியர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிட மாறுதலில், மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் இட முன்னுரிமை, ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்கத்தினர், தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நேற்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர் சார்பில், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சு நடத்தினார். இதில், மாற்று திறனாளிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டதோடு, ஓரிரு நாளில், அதற்கான அரசாணை வெளியிடப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாற்று திறனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement