Ad Code

Responsive Advertisement

நிகர்நிலை பல்கலைகளில் ஒதுக்கீடு : மருத்துவ கல்வி இயக்ககம் திணறல்

நீதிமன்றங்களின் மாறுபட்ட தீர்ப்பால், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50 சதவீத இடங்களை பெற முடியாமல், மருத்துவக் கல்வி இயக்குனரகம் திணறுகிறது. 

'தமிழகத்தில் உள்ள தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில், 50 சதவீதத்தை, மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, எட்டு நிகர்நிலை பல்கலைகளின், 604 இடங்களுக்கான கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று துவங்கியது. அதில், மாநில ஒதுக்கீடு இடங்களை பெறாமல், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிகர்நிலை பல்கலைகளில், தேசிய கவுன்சிலுக்கு இட ஒதுக்கீடு உள்ளதால், மாநில இட ஒதுக்கீட்டிற்கு இடம் தர அவசியம் இல்லை என, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதனால், மாநில ஒதுக்கீடு இடங்களை, நிகர்நிலை பல்கலைகளில் இருந்து பெற முடியவில்லை' என்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement