Ad Code

Responsive Advertisement

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : இயக்குனர் உத்தரவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி, விடுதிகளில் தங்கி பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் நாளில் வழங்க அதன் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.




அவர் உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களான பாடநுால்கள், குறிப்பேடுகள், காலணிகள், புத்தகப்பைகள், வண்ண பென்சில்கள், புவியியல் வரை புத்தகங்கள் போன்றவைகளை பள்ளி திறக்கும் நாளன்றே வழங்க வேண்டும்.

2017 ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறைவிட பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நான்கு இணை சீருடைகளை வழங்கப்படவுள்ளது. இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை மே 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement