Ad Code

Responsive Advertisement

கம்ப்யூட்டர்களை பாதிக்கும் வைரஸ் தடுக்க முடியும்: சிறுமி விஷாலினி உறுதி

'கம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை தம்மால் தடுத்து நிறுத்த முடியும்,'' என, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, சிறுமி விஷாலினி தெரிவித்துள்ளார்.




திருநெல்வேலியைச் சேர்ந்த கல்யாணகுமாரசாமி - சேதுராகமாலிகா தம்பதியின் மகள் விஷாலினி , 16. சிறு வயதில் தமது, ஐ.கியூ., திறனுக்காக பாராட்டப்பட்டவர்.

சிறு வயதிலேயே, 'மைக்ரோசாப்ட், சிஸ்கோ' போன்ற நிறுவனங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். கடந்த ஆண்டு, பிரதமர் மோடியுடன் நேரலையில் உரையாடி பாராட்டு பெற்றார். ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவர். தற்போது, 16 வயதில் நேரடியாக பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொழில் நுட்பத்தில், பி.டெக்., இரண்டாம் ஆண்டு பயின்று வரு கிறார்.

சிறுமி விஷாலினியை சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், பெங்களூரு மையத்தில், 700 விஞ்ஞானிகள் முன்னிலையில் புதிய தகவல் தொழில் நுட்பம் குறித்து உரையாற்ற அழைத்தது.


திருநெல்வேலியில் விஷாலினி கூறியதாவது:தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும், வான்னக்ரை வைரஸ் பாதிப்பு குறித்து, வெவ்வேறு தகவல்கள் வருகின்றன.

வைரசை தவிர்ப்பதற்கு, இணையத்தில் இருந்து ஒரு, 'டொமைனை' நீக்கினால் போதும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், போதுமானது அல்ல. அப்படியும் அதன் தாக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். கம்ப்யூட்டர்கள் மட்டுமல்லாது, எம்.ஆர்.ஐ., ஸ்கேனர்கள், ரத்தம் சேமிக்கும் மையங்களையும் குறிவைத்து வைரஸ் அனுப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் இருக்கும் விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை என்பதும் நிதர்சனம். வைரஸ் அனுப்பிய ஹேக்கர்கள், அதற்காக பணத்தை மிரட்டி பெறுகின்றனர். பணத்தை அனுப்பிய பிறகும், வைரசை நீக்க மறுக்கின்றனர். எனவே, இதை அழித்தொழிப்பது தான் நல்லது. ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மற்ற மாநிலங்களும் பாதிக்கும் முன், அவற்றை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை. நான் இந்த வைரசுக்கு எதிரான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால், அவர்களது நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை சரி செய்து தருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement