Ad Code

Responsive Advertisement

முதுநிலை மருத்துவ படிப்புக்கு 18ம் தேதி முதல் கவுன்சிலிங்

நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ இடங்களுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.



சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நிகர்நிலைப் பல்கலை மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் குறித்த, அறிவிப்பை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கவுன்சிலிங், அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.

● நிகர்நிலைப் பல்கலைகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், வரும், 18 முதல், 20ம் தேதி வரை நடைபெறும்

● சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும் 22, 23ம் தேதிகளில் நடைபெறும்

● அரசு, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான இடங்களுக்கு, 23ம் தேதி பிற்பகல், 2.00 மணிக்கு நடைபெறும்

● அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும், சுயநிதி கல்லுாரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலையின், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும், வரும், 24 முதல், 27ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement