Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்கள் 25ல் 'ஸ்டிரைக்'

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி : ஊதிய உயர்வு தொடர்பாக, நேரடியான பேச்சு நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது. 

இதில், 64 சங்கங்களை சேர்ந்த, 3.50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். வேலை நிறுத்தம் குறித்து, ஒரு மாதம் முன்பே, 'நோட்டீஸ்' வழங்கியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement