Ad Code

Responsive Advertisement

பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை

நமது நாளிதழ்செய்தியை தொடர்ந்து, துவக்கப் பள்ளிகளுக்கும், முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஏப்., ௨௧க்குள், ஆண்டு இறுதி தேர்வுகளை முடித்து, விடுமுறை விடஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். 

ஆனால், தொடக்கப் பள்ளிகளில், ஏப்., 29 வரை தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. 'கோடை வெப்பம் அதிகரித்து, மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், தேர்வை விரைந்து முடித்து, முன்கூட்டியே விடுமுறை விட வேண்டும்' என, நமது நாளிதழில், ஏப்., 5ல் செய்தி வெளியானது.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் முன்கூட்டியே விடுமுறை விட வலியுறுத்தி, அரசிடம் மனு அளித்தன. இதையடுத்து, ஏப்., 21ல், தொடக்கப் பள்ளி களுக்கும் விடுமுறை விட, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, திட்ட மிட்ட தேர்வுகளை, காலை, மாலை என, இரு வேளைகளில் நடத்தி முடிக்க, தலைமைஆசிரியர்கள் அறிவுறுத்தப்
பட்டு உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement