Ad Code

Responsive Advertisement

AEEO வீட்டில் ரூ.10 லட்சம் கொள்ளை

தஞ்சாவூர், பேராவூரணி அருகே, உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டின் பீரோவை உடைத்து, 3.84 லட்சம் ரூபாய் ரொக்கம், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த ரெண்டாம்புளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; பட்டுக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி, பேராவூரணி வேளாண் அலுவலகத்தில், உதவி இயக்குனர்.
நேற்று முன்தினம், தபால் நிலையத்தில் இருந்து எடுத்து வந்த, 'ரெக்கரிங் டிபாசிட்' பணம், 3.69 லட்சத்தை, வீட்டு பீரோவில் வைத்து பூட்டி விட்டு, ரவிச்சந்திரன், தஞ்சாவூருக்கு அலுவலக வேலையாக சென்று விட்டார். ராணியும் அலுவலகம் சென்று விட்டார்.
இதன்பின், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரவிச்சந்திரன் மறைத்து வைத்து சென்ற சாவியை எடுத்து, பீரோவை திறந்து, ரொக்கம், 3.69 லட்சம், ஏற்கனவே இருந்த, 15 ஆயிரத்து, 250 ரூபாய் என மொத்தமாக, 3.84 லட்சம் ரூபாய் மற்றும், 30 சவரன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றனர்.
திருடு போன நகை மற்றும் ரொக்கத்தின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
மாலையில், பணி முடிந்து வீடு திரும்பிய ரவிச்சந்திரன் தம்பதி, வீட்டின் கதவை திறக்க முயன்ற போது உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பக்கம் சென்று பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
பட்டப்பகலில், பணம், நகைகளை கொள்ளை அடித்து சென்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement