Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு ஆங்கில தேர்வில்அச்சு பிழையால் குழப்பம்

பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில், மொழி பெயர்ப்பு பகுதியும், உரையாடலும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
வேடசந்துார் செல்லக்குட்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சுப்ரமணி கூறுகையில், ''நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' எடுக்கலாம். மற்ற மாணவர்கள், எளிதாக தேர்ச்சி பெற முடியும். உரையாடல் பகுதியில், தொடர்ச்சியாக இரு வார்த்தைகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் தடுமாறி உள்ளனர். 
ஐந்து மதிப்பெண்களுக்கான படத்திற்கு விளக்கம் எழுதும் பகுதி, எளிமையாக இருந்துள்ளது,'' என்றார்.மாணவர்கள் கூறுகையில், 'மொழி பெயர்ப்பு பகுதியில், 'சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருங்கள்' என்ற வார்த்தையில், 
தவறான அச்சுப்பதிப்பால் கூடுதலாக, இரு எழுத்துக்கள் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement