Ad Code

Responsive Advertisement

ஆங்கிலத்தேர்வு வினாவில் தமிழ் வார்த்தை பிழை

பத்தாம் வகுப்பு,ஆங்கிலம் இரண்டாம் தாள் பொதுத்தேர்வில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வினாவில், மொழிப்புபெயர்ப்புக்காக கொடுக்கப்பட்ட, தமிழ் வார்த்தை பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.




தமிழகம் முழுக்க, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. 100 மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வு, காலை 9:15 மணிக்கு துவங்கி, மதியம், 12 மணிக்கு முடிவடைந்தது.
ஒரு மதிப்பெண், 'மைண்டு மேப்' உள்ளிட்ட, பகுதிகள் கடினமாக இருந்ததால், சென்டம் பெறுவோர் எண்ணிக்கை சரியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாளில், பிரிவு நான்கு, கேள்வி எண் 19ல், ஐந்து மதிப்பெண்களுக்கு, மொழிப்பெயர்ப்பு அல்லது, படம் பார்த்து கட்டுரை எழுதுதல் சார்ந்த, வினாக்கள் இடம்பெற்றுள்ளன. கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களால், படம் பார்த்து எழுத இயலாது என்பதால், மொழிப்பெயர்ப்பு பகுதி இடம்பெறுவது வழக்கம்.
இதில், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பது குறித்து, தமிழில் இடம்பெற்ற வாக்கியங்களை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
இவ்வினாவில், 'சுற்றுப்புறத்தைத்துாங துாய்மையாக வைத்திருங்கள்' என, பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.கோவை கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சந்துரு 
கூறுகையில்,''தமிழில் அச்சிடப்பட்ட வாக்கியத்தை முழுமையாக படித்தால், அர்த்தம் புரிந்துவிடும். இருப்பினும், ஆங்கில வினாத்தாளில் இடம்பெற்ற, ஒரே தமிழ் வாக்கியம் சார்ந்த 
கேள்வியும், பிழை
யாக இருப்பதாக, மாணவர்கள் தெரிவித்தனர்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement