மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது.
ஆக., 17ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நவ., 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. இப்பணி முடிந்து, ஐந்து மாதங்களாகியும், தேர்வு செய்யப்பட்ட, 119 விரிவுரையாளர்களுக்கு, இன்னமும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே சுயநிதி கல்லுாரி மற்றும் பள்ளிகளில் செய்து வந்த வேலையை விட்டு விட்டனர். தற்போது, அரசு பணி ஆணையும் கிடைக்காமல், இருந்த வேலையையும் விட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, உடனடியாக, பணி நியமன ஆணையை அரசு வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில், அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை