Ad Code

Responsive Advertisement

ரூ.10 லட்சம் 'டிபாசிட்':100 பேருக்கு 'நோட்டீஸ்'

வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, கடந்தாண்டு நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள், தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெற்றனர்.

இந்நிலையில், வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்களின் பட்டியல், வங்கிகள் சார்பில், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருமான வரித்துறையினர், 18ம் தேதி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வேலுார் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் விபரம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100 பேருக்கு, இந்த பணம் எப்படி வந்தது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத பட்சத்தில், அவர்கள் டிபாசிட் செய்த பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement