Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு


தமிழகத்தில் முதன் முறையாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரும் 1ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் முறைகேடுகளை தடுக்க பாயின்ட் ஆப் சேல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கருவிகளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு, அதில் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார், ரேஷன் கார்டு, செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 100 சதவீதம் முடிந்துள்ளது. மீதியுள்ள மாவட்டங்களில் 75 முதல் 85 சதவீதம் முடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் பழைய ரேஷன் அட்டைகளுக்கு பதில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதற்கான பணி மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து வரும் 28, 29ம் தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பின்னர், இந்த கார்டுகளை தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி அன்று 4 அல்லது 5 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டும் வழங்கும் தேதி, இடம் விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும்போது விற்பனையாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது. அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டை வழங்கும்போது பழைய ரேஷன் கார்டில் கேன்சல் சீல் அடித்து அட்டைதாரர்களிடம் திருப்பி வழங்க வேண்டும். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன் விற்பனையாளர்கள் அதை பாயின்ட் ஆப் சேல் கருவியில் ஸ்கேன் செய்த பின்னர் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement