Ad Code

Responsive Advertisement

பள்ளி உதவியாளர் பணி நாளை கவுன்சிலிங்

பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 2014 - 15, 2015 - 16ம் ஆண்டுகளில், குரூப் - 2 ஏ பிரிவில், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடந்தது. 

இதில், தமிழகத்தில், 256 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும். ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன், ஒரு மணி நேரம் முன்னதாக, கூட்ட அரங்கிற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement