'நேரடியாக நியமிக்கப்பட்ட 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு இல்லை' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு கேட்டு, தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனு அனுப்பினர்.
ஆனால், இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ெவளியிடப்பட்ட உத்தரவில், 'நேரடியாக நியமன உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம், 'நிர்வாக அலுவலர் பணியிடமாக'
கருதப்படுகிறது. இதனால், பதவி உயர்வு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களை போன்று ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை