Ad Code

Responsive Advertisement

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு!!!

 


சர்க்கரை நோய் அறிகுறிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத உணவு எது?





இப்போது பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய் (diabetes foods). ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்று கூறப்பட்ட சக்கரை வியாதி நோய், இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் பிடிக்கிறது. இந்த நீரிழிவு உண்மையில் ஒரு உடல்நல குறைபாடு தானே தவிர ஒரு நோயல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.


சரி இப்போது சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் மற்றும் எந்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.


சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது சக்கரை நோய் வருவதற்கான ஒரு வகை அறிகுறியாகும். அதே போல திடீரென அடிக்கடி அதிக அளவு பசி மற்றும் தாகம் ஏற்படுவதும் சக்கரை நோய்க்கான அறிகுறியாகும்.



இயல்பான நிலையில் இருந்து மாறி, சிறிய வேலை செய்தால் கூட உடல் சோர்வு ஏற்படுவது, அடிக்கடி தலை சுற்றுவது போன்ற உணர்வுகள் கூட சக்கரை நோய்க்கான அறிகுறியாகும்.


மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் ஒரு மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் (Diabetes Foods To Eat List):-

சக்கரை நோய் குணமாக – தானியங்கள்:-

sakkarai noi kunamaga tamil: சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த (sakkarai noi kunamaga tamil) தினமும் சாப்பிடும் உணவுகளில் கைக்குத்தல் அரிசி, தவுடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், துவரம் பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு போன்ற தானியங்களை அதிகளவு சேர்த்து கொள்ள வேண்டும்.


சக்கரை நோய் குணமாக – காய்கறிகள் (Diabetes Vegetables):-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் அன்றாட உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டிய காய்கறிகள் – கேரட், பீட்ருட் தவிர மற்ற அனைத்து காய்கறிகளை சாப்பிடலாம், முக்கியமாக அனைத்து கீரை வகைகளையும் (sakkarai noi kunamaga tamil) சாப்பிடலாம்.


சக்கரை நோய் குணமாக – பழங்கள் (Diabetes Fruits):-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த  தினமும் சாப்பிட வேண்டிய (diabetes foods) பழங்கள்.


ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சி, மாதுளை, சாத்துக்குடி போன்ற பழங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தினமும் சாப்பிடலாம்.


நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் பழங்களில் ஒன்றாகும்.


ஆரஞ்சு

எந்த நோயாளிகளும் எந்தவித பயமும் இல்லாமல் சாப்பிடக்கூடிய பழம்தான் இந்த ஆரஞ்சு.


இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது.


நாவல் பழம்

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் என பலசத்துக்கள் நிறைந்துள்ளது.


தினமும் மூன்று நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்க முடியும்.


கொய்யாப்பழம்

அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம். சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த பழமாகும்.


தோல்வியாதி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது.


திராட்சை பழம்

திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.


பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு.


சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம். உணவு சமிபாட்டுக்கும் பப்பாளி சிறந்த பழம்.


மாதுளம் பழம்

மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.


ஆப்பிள்

ஆப்பிள் கொலஸ்ட்ரோல், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த பழம்.


இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.



சாப்பிட வேண்டிய மற்றய உணவுகள்

கீரை உணவுகள், தக்காளி, வாழைப்பூ, பாகற்காய், வெங்காயம், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய் மற்றும் வெள்ளை முள்ளங்கி.


சக்கரை நோய் குணமாக – இறைச்சி வகை:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த தினமும் சாப்பிட வேண்டிய இறைச்சி வகைகள்.


கோழிக்கறி, மீன் (வறுக்ககூடாது), முட்டையில் வெள்ளைக்கரு ஆகியவை சாப்பிடலாம்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிடக்கூடியவை:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த  அன்றாட சாப்பிட கூடியவை. கொழுப்பு நீங்கிய பால், அதிக புளிப்பிள்ளாத மோர், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை இல்லாத டீ, காபி அளவோடு குடிக்கலாம்.


மேலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றையும் சாப்பிடலாம்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடகூடாத உணவுகள் (Diabetes Foods To Avoid List):-

கிழங்கு வகைகள்:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) கிழங்கு வகைகள்.


உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிகாய் ஆகியவை உணவில் சேர்க்க கூடாது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள் (Diabetes Fruits To Avoid Llist):-

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) பழங்கள் – வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டாப்பழம், தர்பூசணி, பேரிட்சை ஆகிய பழங்களை சாப்பிடகூடாது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் தவிர்க்க  வேண்டியவை..


எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், கேக் வகைகள் மற்றும் சுவிட்ஸ் ஆகியவை சாப்பிடகூடாது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் – இறைச்சி வகை:-

இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) இறைச்சி வகைகள். ஆட்டுக்கறி, மாடுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடக்கூடாது.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் – தின்பண்டங்கள்:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத  தின்பண்டங்கள். சர்க்கரை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொறித்த பலகாரங்களை சாப்பிடக்கூடாது.



Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement