Ad Code

Responsive Advertisement

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மாத ஊதியம் பெறுவதால், அவர்களுக்கான தொகையை விடுவிக்கும் நோக்கில் போதுமான ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருப்பதுடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.


புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வஙகி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க அதிகளவில் மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இல்லாமல் தொடர்ந்து மூடப்பட்டு கிடக்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களில் 90 சதவீத்துக்கு அதிகமானவர்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஊதியம் பெறுவதால் சம்பள நாளான புதன், வியாழக்கிழமைகளில் (டிச. 1) சேமிப்புக் கணக்கு புத்தகம் மூலம் பணம் எடுக்க வருவோருக்கு தடையின்றி பணம் கொடுக்கும் வகையில் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகப்பட்டு சமாளிக்கப்படுகிறது.
இதுதவிர ஒரு சில தனியார் வங்கிகளுக்கு குறைவான அளவில் 500 ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றுள்ளன.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன் கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் வந்துள்ளன.
ஏடிஎம் மையங்களில் நிலவும் பணத்தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சீரடையும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement